ஆகமம்
ஆகமம் ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம் , வைணவம் , சாக்தம் ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை , கிரியை , யோகம் , ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன. ஆகமங்களின் தோற்றம் ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை என கூறப்பட்டன. மாணிக்கவாசகர் “ ஆகமம் ஆகி நின்று அன்னிபான் ” எனவும் “ மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோ...