ஆகமம்

                                                                      

ஆகமம்


ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம்வைணவம்சாக்தம் ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியைகிரியையோகம்ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.



ஆகமங்களின் தோற்றம்

ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை என கூறப்பட்டன.

மாணிக்கவாசகர் “ஆகமம் ஆகி நின்று அன்னிபான்” எனவும் “ மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்துதருளியும்” எனப்பாடுகின்றார்.

திருமூலர்ஆகமம் பற்றிக் கூறியதை “சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே” என்ற குறிப்புத் தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை “தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே” என்றும் கூறுகின்றார்.

"செந்தமிழ் சிந்தை செய்து ஆகமம் செப்ப லுற்றேனே" என்று நம்பிரான் திருமூலர் பாடி அருளினார்.

மேலும் அதை தெய்வத்தமிழில் தான் அருளினேன் என்பதற்கு "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!" என்று,  வழி வழியாக வந்த ஆகமங்களை இறைவன் கூற நமக்கு அருளினார் என்று அவரே கூறுகிறார்.

"நவ ஆகமம் எங்கள்  நந்தி பெற்றானே" என்று நம்பிரான் திருமூலர் 9 ஆகமங்களை அருளினார்.

 

இருக்குவேத இந்திரனின் 26 சிறப்புப் பெயர்கள்

  1. காற்றிலிருந்து மூன்று உலகங்களில் பரவி நிற்பதால் ’வாயு’ என்பர் ரிசிகள்.
  2. மழையால் மூவுலகங்களை நனையச் செய்வதால் ‘வருணன்’ என்பர்.
  3. வானில் கர்ஜனை செய்வதால் ’உருத்திரன்’ என்பர்.
  4. நான்கு விதமான பொருள்களுக்கு, நிலையான உயிர் நிலையமாகி, அவன் அரசு புரிவதால், ’இஷ்டெ’ (இந்திரன்) என்பர்.
  5. சரியான காலத்தில் பூமியை நீரால திருப்தி படுத்துவதாலும், மக்களிடம் மகிழ்ச்சியுடன் இருப்பதால் ‘பர்ஜன்யன்’ என்பர்.
  6. இரண்டு பெரிய உலகங்களுக்குத் தலைவனாக (புருஷனாக) இருப்பதால் ‘பிரகசுபதி’ என்பர்.
  7. வாக்கு, சத்தியம், மனம், பூமண்டலம் அறிவைத் தரும் கருவிகளாக இருப்பதால் ’பாதுகாப்பவன்’ அல்லது ‘பிராம்மணஸ்பதி’ என்பர்.
  8. சரியான காலத்தில் பூமியில் உள்ள சீவராசிகளுக்கு உணவு தருவதால் ’நிலங்களின் தலைவன்’ அல்லது ‘சேத்திராதிபதி’ என்பர்.
  9. பூமியின் நடுவில் இருந்து மக்களை பாதுகாப்பதால் ’வாஸ்தோஷ்பதி’ என்பர்.
  10. சத்தியத்தால் சத்தியத்திலேயே இருப்பதால் ‘ருதம்’ என்பர்.
  11. வேதம் வாக்கிலே அறியப்படுவதால், சொல்லால் சந்தஸ் சொல்லப்படுவதால் ’வாசஸ்பதி’ என்பர்.
  12. எங்கும் சுற்றிக் கொண்டும், எதனாலும் பாதிக்கப்படாதவனாக இருப்பதால் ‘அதிதி’ என்பர்.
  13. படைப்புகளுக்குப் பாதுகாவலனாக இருந்து கொண்டு, கருத்தில் சுகத்தை விரும்புவதால் "ஹிரண்யகர்பன்” என்பர்.
  14. படைத்த சீவராசிகளை, மரணத்திற்கு பின் அழைத்துச் செல்வதால் ‘எமன்’ என்பர்.
  15. இவன் அனைவரிடம் நன்கு பழகுவதால் ‘மித்திரன்’ என்பர்.
  16. வெயிற்காலத்திற்கு பின் நல்ல மழை அளித்து, அனைத்தையும் நன்கு செயல்பட வைப்பதால் ‘விஸ்வகர்மன்’ என்பர்.
  17. இந்திரனுக்கு மூவுலகில் நெய்க்குளம் இருப்பதால் அவனை ‘சரசுவதி’ என்பர்.
  18. வேன பார்க்கவ முனிவர் என்பவர் இந்திரனை ‘வேனன்’ என்பர்.
  19. ’மன்யுதாபச முனி’ இந்திரனை ‘மன்யு’ (கோபக்காரன்) என்பர்.
  20. மரணவேளையில், உயிர்களை இழுத்துச் செல்வதால் ’சுருநபந்து’ அல்லது ‘அசுனீதி’ என்பர்.
  21. கோடைகால முடிவின் போது அவன் தோண்றுவதால் ‘கிருத்சமதன்’, ‘அபாம்நபதன்’, அல்லது ‘சலமகன்’ என்பர்.
  22. வானில் கார்மேகங்களை தாங்கி நிற்பதால் ‘நிரந்ததி’ அல்லது ‘ தசீகரன்’ என்பர்.
  23. கர்ஜனை செய்து கொண்டு பூமியில் ஒன்பது மாதம் ஜனனக் கிருமியாவதால் ‘தாத்ரி’ என்பர்.
  24. அந்தரிட்சத்தில் வசிப்பதாலும், வேகமாக நழவி விழுவதாலும் ‘தர்க்‌ஷியர்’ என்பர்.
  25. வானத்தில் கர்ஜித்துக் கொண்டு,சூரியோதயத்திற்கு சென்று, அடித்தளத்திலிருந்து நீரை விடுவதால் ‘ஊர்வசி புரூரவன்’ என்பர்.
  26. பெரும் ஒலியுடன் இறந்தவனை எடுத்துச் செல்வதால் இறந்த அவனை எமனின் கடைசி மகன் ’மிருத்யு’ என்பர்.



Comments