Posts

Showing posts from August, 2021

ஆகமம்

                                                                       ஆகமம் ஆகமங்கள்  என்பது  இந்து சமயத்தின்  முப்பெரும் பிரிவுகளான  சைவம் ,  வைணவம் ,  சாக்தம்  ஆகிய  சமயங்களின்  மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும்.  இவை பொதுவாகத்  தென்னிந்தியாவிலேயே  புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை  வேதங்களை  அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள்  சரியை ,  கிரியை ,  யோகம் ,  ஞானம்  எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன. ஆகமங்களின் தோற்றம் ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை என கூறப்பட்டன. மாணிக்கவாசகர் “ ஆகமம் ஆகி நின்று அன்னிபான் ” எனவும் “  மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்துதருளியும் ” எனப்பாடுகின்றார். திருமூலர்ஆகமம் பற்றிக் கூறியதை “ சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே ” என்ற குறிப்புத் தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை “ தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே ” என்றும் கூறுகின்றார். "